ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும்: விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை வெளியீடு


ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும்: விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 9 April 2024 5:48 AM GMT (Updated: 9 April 2024 9:47 AM GMT)

ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளது. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 64 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு

தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு

இலங்கை உடனான வெளியுறவு கொள்கையில் தமிழக நலன் பாதுகாக்கப்படும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story