தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? - முழு விவரம்


தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? - முழு விவரம்
x
தினத்தந்தி 18 March 2024 3:21 PM IST (Updated: 18 March 2024 8:07 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சென்னை,

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அதேவேளை, தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை நாளை மறுதினம் முதல் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீது 28ம் தேதி பரீசிலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பபெற 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் உறுதியாகியுள்ள நிலையில் எஞ்சிய தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது. இதன் முழு விவரம் பின்வறுமாறு:

தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள்:-

வட சென்னை

தென் சென்னை

மத்திய சென்னை

ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம் (தனி)

அரக்கோணம்

வேலூர்

தர்மபுரி

திருவண்ணாமலை

ஆரணி

கள்ளக்குறிச்சி

சேலம்

ஈரோடு

நீலகிரி (தனி)

கோவை

பொள்ளாச்சி

பெரம்பலூர்

தஞ்சாவூர்

தேனி

தூத்துக்குடி

தென்காசி (தனி)

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:-

திருவள்ளூர் (தனி)

கடலூர்

மயிலாடுதுறை

சிவகங்கை

திருநெல்வேலி

கிருஷ்ணகிரி

கரூர்

விருதுநகர்

கன்னியாகுமரி

புதுச்சேரி

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்:-

விழுப்புரம் (தனி)

சிதம்பரம் (தனி)

இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடும் தொகுதிகள்:-

நாகப்பட்டினம் (தனி)

திருப்பூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிடும் தொகுதிகள்:-

மதுரை

திண்டுக்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதி:-

ராமநாதபுரம்

ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி, வேட்பாளர்

திருச்சி - துரைவைகோ

கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி, வேட்பாளர்:-

நாமக்கல் (தி.மு.க. சின்னம்) - சூரியமூர்த்தி


Next Story