நயன்தாரா அழகை புகழ்ந்த ஷாருக்கான்


நயன்தாரா அழகை புகழ்ந்த ஷாருக்கான்
x

இந்தியில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடும் ஷாருக்கான் நடிப்பில் 'பதான்' படம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து இந்தியில் அறிமுகமாகிறார் நயன்தாரா.

விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படம் செப்டம்பர் மாதம் திரைக்குவர உள்ளது. இந்த நிலையில் வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு ஷாருக்கான் பதில் அளித்தார்.

அப்போது ஷாருக்கான் கூறும்போது, "நயன்தாரா இனிமையானவர். மிகப்பெரிய அழகி. அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. விஜய்சேதுபதி திறமையான நடிகர். மிகவும் அடக்கமானவர். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஜவான் படம் பக்கா கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இயக்குனர் அட்லி இந்த படத்தில் என்னை இரண்டு விதமாக திரையில் காட்ட முயற்சி செய்துள்ளார். சில வார்த்தைகளை கொண்டு பாடவும் வைத்தார்'' என்றார்.


Next Story