'லவ் யூ பார் லவ்விங் ஜவான்' ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ஷாருக்கான்...!


லவ் யூ பார் லவ்விங் ஜவான் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ஷாருக்கான்...!
x

ஜவான் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மும்பை,

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், அட்லி. தற்போது இவர் இயக்கியுள்ள ஜவான் படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து முடித்துள்ளனர்.

மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்திருக்கிறார். ஜவான் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து படம் இன்று(வியாழக்கிழமை) வெளியானது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் "திரையரங்குகளின் உள்ளேயும், வெளியேயும் படத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நன்றி கூற நான் நேரம் ஒதுக்க வேண்டும். லவ் யூ பார் லவ்விங்" என பதிவிட்டுள்ளார்.


Next Story