கச்சநத்தம் கொலை வழக்கில் கைது: 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கச்சநத்தம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கச்சநத்தத்தில் கடந்த மே மாதம் திருவிழா நடந்தது. அந்த சமயத்தில் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்கள் உள்பட பலரை கைது செய்தனர்.
அந்த வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ள மீனாட்சி, செல்லம்மாள், முத்தையா ஆகிய 3 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story