மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; ஒருவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; ஒருவர் பலி
x

ஆவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் ஒருவர் பலியானார்.

சென்னை

ஆவடி,

ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி நேற்று மாலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பட்டாபிராம் அருகே தண்டுரை மேம்பாலம் மீது பூந்தமல்லி நோக்கி சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆவடியை அடுத்த பாலவேடு மேல்பட்டி தெருவை சேர்ந்த துளசி (வயது 45) மற்றும் மோகன்ராஜ் (38) இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த துளசி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மோகன்ராஜ், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story