தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எந்தெந்த தொகுதிகளில் போட்டி? - வெளியான அறிவிப்பு


தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எந்தெந்த தொகுதிகளில் போட்டி? - வெளியான அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2024 5:37 AM GMT (Updated: 12 March 2024 5:56 AM GMT)

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளது.

அதன்படி, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தற்போது திண்டுக்கல், மதுரையில் போட்டியிடுகிறது.


Next Story