ராணிப்பேட்டையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு


ராணிப்பேட்டையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
x

சென்னை மழை பாதிப்பு தொடர்பாக உதவிகளுக்கு 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

முன்னதாக கனமழை காரணமாக சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கம்போல் நாளை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மேலும் 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றும், நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மழை பாதிப்பு தொடர்பாக உதவிகளுக்கு 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் 044-25619204, 06, 07 ஆகிய எண்களிலும் மழை பாதிப்பு பற்றி தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story