31வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 11 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை


31வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 11 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2023 2:54 PM IST (Updated: 6 Nov 2023 3:01 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேம்,

31வது நாளாக தொடரும் போர்:

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. மேலும், காசாமுனை மீது இஸ்ரேல் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் மீதும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 31வது நாளாக நீடித்து வருகிறது.

பலி எண்ணிக்கை:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி, தரைவழி தாக்குதலில் இதுவரை 9 ஆயிரத்து 770 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.

1 More update

Next Story