சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றது தமிழகத்திற்கு பெருமை: எடப்பாடி பழனிசாமி
இந்தியத் திருநாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியத் திருநாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.
இதுவரை ஏற்றப் பொறுப்புகளில் எல்லாம் திறம்பட செயல்பட்டு, அரசியல் மற்றும் சமூக சேவையில் தனித்துவமானப் பங்காற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள், இந்த உயரிய பொறுப்பேற்றது தமிழகத்திற்கு பெருமை.
துணை ஜனாதிபதியாக அவர்தம் மக்கள் பணி சிறக்க மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.