திருநெல்வேலியில் 3 காவலர்களுக்கு சேமநல நிதியிலிருந்து உதவித்தொகை: எஸ்.பி. வழங்கினார்
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 காவலர்கள் மருத்துவ சிகிச்சைக்காக செய்த செலவு தொகையை காவலர் சேம நல நிதியிலிருந்து பெற்றுத் தருமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்திருந்தனர்.;
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரமூர்த்தி, மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் சரஸ்வதி மற்றும் மாவட்ட தனிப்பிரிவில் பணிபுரியும் முதல் நிலை காவலர் நம்பிராஜன் ஆகியோரின் மருத்துவ சிகிச்சைக்காக செய்த செலவு தொகையை காவலர் சேம நல நிதியிலிருந்து பெற்றுத் தருமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்திருந்தனர்.
அதன்படி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் மேற்சொன்ன 3 காவலர்களுக்கும், சேம நல நிதியிலிருந்து உதவி தொகையை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேற்று வழங்கினார்.