திருநெல்வேலி: மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்- கணவன் கைது
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.;
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி, நடுக்கல்லூரை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 33). அவரது மனைவி வள்ளி(27). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுந்தரபாண்டியன் மது அருந்திவிட்டு வள்ளியிடம் பணம் கேட்டபோது தராததால், வள்ளியிடம் பிரச்சினை செய்து, அரிவாளால் தாக்கி ரத்த காயம் உண்டாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து வள்ளி, சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நேற்று சுந்தரபாண்டியனை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.