இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025

Update:2025-05-04 08:18 IST
Live Updates - Page 2
2025-05-04 07:58 GMT

பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது - வைகோ பேட்டி


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் 26 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அதே நேரத்தில், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் துணிச்சலுடன் செயல்பட்டு, மீதமுள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்த செய்தி மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்தச் செய்தி ஊடகங்களில் விரிவாக வெளியிடப்படவில்லை” என்று கூறினார். 


2025-05-04 06:53 GMT

திருப்பூர்: பள்ளத்தில் விழுந்து தம்பதி உயிரிழப்பு, மகள் படுகாயம் - முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு


திருப்பூர் மாவட்டம் குள்ளாய்ப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் இருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி அறிவித்துள்ளார்.


2025-05-04 06:52 GMT

தமிழிலும் வசூலை குவிக்க வரும் மோகன்லாலின் 'தொடரும்'


மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் வசூலை குவிக்க 'தொடரும்' தயாராகி இருக்கிறது. அதன்படி, இப்படம் வருகிற 9-ம் தேதி தமிழில் வெளியாக உள்ளது.


2025-05-04 06:50 GMT

உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி கயல்விழியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


2025-05-04 06:48 GMT

தமிழ் வார விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பங்கேற்பு


பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் 'தமிழ் வார விழா' நிறைவு விழா முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (திங்கள் கிழமை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


2025-05-04 06:47 GMT

'புதிய கல்விக் கொள்கையை இதற்காகத்தான் எதிர்க்கிறோம்..' - திருமாவளவன் பேட்டி


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவர்களுக்கு தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது புதிய கல்விக் கொள்கையால் ஏற்பட்ட நெருக்கடி. இதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என தமிழகத்தில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறோம்” என்று கூறினார்.

2025-05-04 06:44 GMT

"ஆங்கிலத்தில் டைட்டில் வைக்க இதுதான் காரணம்" - சசிகுமார் ஓபன் டாக்


ஆங்கில பெயர் வைத்ததற்கான காரணத்தை நடிகர் சசிக்குமார் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “'தமிழ் பெயர் வைப்பதை நாங்கள் தவிர்க்கவில்லை. தற்போது படங்களை ஓடிடியில் விற்கிறோம். 3 மொழிகளில் ஓடிடியில் படத்தை விற்கும்போது ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியுள்ளது” என்று கூறினார்.


2025-05-04 05:49 GMT

கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன், சிறுமியின் பெற்றோர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு


கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன், சிறுமியின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


2025-05-04 05:47 GMT

சோழர்கள், பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு பாடப் பகுதி...இதை தீர்மானித்தது யார் ?' - மாதவன் கேள்வி


என்.சி.இ.ஆர்.டி. புத்தகத்தில் முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மாதவன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "நான் பள்ளியில் படித்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி 4 பாடங்கள் இருந்தன. ஆனால் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றி ஒரே ஒரு பாடப் பகுதி மட்டுமே இருந்தது. இந்த பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது?" என்றார்.


2025-05-04 05:40 GMT

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 78 வயது முதியவர் போக்சோவில் கைது


சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதால் ஜெயராமன் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயராமனை பிடித்து கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்