இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025

Update:2025-02-21 09:23 IST
Live Updates - Page 2
2025-02-21 09:42 GMT

*மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது.

*எங்கள் பிள்ளைகள் தமிழ், ஆங்கிலம் படித்தே உலகம் முழுவதும் வேலைக்குச் செல்கின்றனர்.

*'சமக்ர சிக்க்ஷா' போன்ற திட்டங்கள் மூலம் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது.

- ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பேச்சு

2025-02-21 08:52 GMT

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

2025-02-21 07:28 GMT

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீர், காற்று, ஒலி மாசு விதிகளை மீறி சிவராத்திரி நடத்த அனுமதிக்கக் கூடாது என சிவஞானம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 

2025-02-21 07:26 GMT

விழுப்புரம்: அரசூர் பகுதியில் பெஞ்சல் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய கடந்த டிசம்பர் மாதம் சென்றபோது, அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது தொடர்பான வழக்கில் பாஜக உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இருவேல்பட்டு கிராமத்தை சார்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை திருவெண்ணைய்நல்லூர் போலீசார் கைது செய்து இன்று சிறையிலடைத்தனர்.

2025-02-21 07:22 GMT

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ராயப்பன் அறிவித்துள்ளார். உடலைவிட்டு உயிர் பிரியும் வலியுடன் கட்சியை விட்டு பிரிகிறேன் என அவர் கூறியுள்ளார். 

2025-02-21 07:17 GMT

கிருஷ்ணகிரியில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். காவலர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.தப்பி செல்ல முயன்ற மற்றொரு நபரான நாராயணனுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்ய சென்ற காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் 2 பேர் பதுங்கி இருந்தபோது காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.

2025-02-21 07:00 GMT

நிதி தராமல் ஆணவமாக பேசுவதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானை கண்டித்து பிப்.25ல் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

2025-02-21 06:59 GMT

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்