இளைஞர்களின் நம்பிக்கை குரல் உதயநிதி ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை

துணை முதல்-அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-27 12:19 IST

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

துணை முதல்-அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனைப் புரட்சியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மக்கள் நலப் பணியும் பிரதிபலிக்கும் விதமாக, இளைஞர்களின் நம்பிக்கைக் குரலாக நீங்கள் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

நல்ல ஆரோக்கியமும் தொடர்ந்து மக்களுக்கு சேவை புரியும் ஆற்றலும் என்றும் உங்களை பொலிவுடன் சேரட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்