இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்: மத்திய அரசு
ஜம்மு மற்றும் பஞ்சாபில் பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.
Live Updates
- 10 May 2025 11:43 AM IST
பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தற்போதைய நிலவரம். போர் பதற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது
- 10 May 2025 11:40 AM IST
பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான் - பாதுகாப்புத்துறை குற்றச்சாட்டு
எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக இன்று காலை பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், "நான் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல்களையும் தீவிரப்படுத்தல்களையும் உருவாக்கியதாக கூறியுள்ளேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் தரப்பின் இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் தீவிரப்படுத்தல்களை இந்தியா பொறுப்புடன் மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றி உள்ளது.
பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான். முன்னதாக இன்று காலை இந்த தீவிரமான மற்றும் ஆத்திரமூட்டல் சம்பவங்கள் மீண்டும் நிகழும் காட்சியை நாங்கள் கண்டோம்” என்று அவர் தெரிவித்தார்.
- 10 May 2025 11:06 AM IST
பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான் - பாதுகாப்புத்துறை குற்றச்சாட்டு
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், "நான் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள்தான் ஆத்திரமூட்டல்களையும் தீவிரப்படுத்தல்களையும் உருவாக்கியதாக கூறியுள்ளேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் தரப்பின் இந்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் தீவிரப்படுத்தல்களை இந்தியா பொறுப்புடன் மற்றும் அளவிடப்பட்ட முறையில் பாதுகாத்து எதிர்வினையாற்றி உள்ளது.
பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான். முன்னதாக இன்று காலை இந்த தீவிரமான மற்றும் ஆத்திரமூட்டல் சம்பவங்கள் மீண்டும் நிகழும் காட்சியை நாங்கள் கண்டோம்” என்று அவர் தெரிவித்தார்.
- 10 May 2025 10:30 AM IST
சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்துக்கு அவசர கொள்முதல் அதிகாரம் - மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கடிதம்
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறி இருந்ததாவது:-
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்கள் விரோதத் தாக்குதல்களுக்கு எதிராக சிவில் நிர்வாகத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு இயக்குனருக்கு தேவையான அவசர கொள்முதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் நான் (பிரதமர் மோடி) நன்றியுள்ளவனாக இருப்பேன், இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- 10 May 2025 10:28 AM IST
டெல்லி விமான நிலையத்தில் 138 விமானங்கள் ரத்து
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான போர் சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. 300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் நேற்று 138 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விமானங்கள் ரத்தாகின. இதில் 66 உள்நாட்டு விமானங்கள் புறப்பாடும், 53 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டன. மேலும் 5 சர்வதேச விமானங்களின் புறப்பாடும், 4 விமானங்களின் வருகையும் ரத்தாகி இருந்தன.
இதுதொடர்பாக விமான நிலைய சமூக வலைத்தள பக்கத்தில், “டெல்லி விமான நிலையம் வழக்கம்போல செயல்படுவதாகவும், இருந்தபோதிலும் மாறிவரும் வான்வெளி சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பயணிகள் சோதனை சாவடிகளில் கூடுதல் நேர காத்திருப்பு மற்றும் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றும் பதிவிடப்பட்டிருந்தது.
- 10 May 2025 10:25 AM IST
பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு
எல்லை பாதுகாப்பு தொடர்பாக, பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துள்ளார்.
எல்லை பகுதிகளில் போர் பதற்றம் நிலவும்சூழலில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் எதிர் தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
- 10 May 2025 10:08 AM IST
எஸ் 400 வான் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை - பாதுகாப்புத்துறை
எஸ் 400 வான் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தாக்குதலில் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு சேதம் அடைந்ததாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
- 10 May 2025 10:03 AM IST
எச்சரிக்கை சைரன் தொடர்ந்து ஒலிப்பதால் பதற்றம்.. ரெட் அலர்ட்டில் அமிர்தசரஸ்
நேற்று இரவு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 15 டிரோன்கள் காணப்பட்டதை அடுத்து, அமிர்தசரசில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், ஜன்னல் அருகே நிற்க வேண்டாம் என்று அமிர்தசரஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 10 May 2025 9:13 AM IST
பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது - இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் தனது எக்ஸ் வலைதளத்தில், “நமது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற வெடிமருந்துகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், அமிர்தசரசின் காசா கான்ட் மீது பல எதிரி ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் பறந்து செல்வது காணப்பட்டது. சட்ட விரோதமான ஆளில்லா விமானங்கள் உடனடியாக நமது வான் பாதுகாப்புப் பிரிவுகளால் ஈடுபடுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்தியாவின் இறையாண்மையை மீறுவதற்கும், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாகிஸ்தானின் அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய ராணுவம் எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும்” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.
- 10 May 2025 9:10 AM IST
எல்லையில் பதற்றம்: இன்று காலை வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு
எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இதன்படி வெளியுறவுத்துறையும், பாதுகாப்புத்துறையும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.