கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை


கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
x

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை கடந்த 2014ம் ஆண்டு அமலிநகர் மையவாடியில் வைத்து 3 பேர் கொலை செய்து புதைத்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த அமலன் மகன் பிரபு (வயது 29) என்பவரை கடந்த 22.5.2014 அன்று அமலிநகர் மையவாடியில் வைத்து கொலை செய்து புதைத்த வழக்கில் அமலிநகர் பகுதியைச் சேர்ந்தவர்களான தயானந்தன் மகன் டெரன்ஸ்(30), மைக்கேல் மகன் பிரக்சின் ஷியாஷ்டன்(32) மற்றும் ஆல்பர்ட் மகன் இருதய அந்தோணி சிரியல்(32) ஆகியோரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன் நேற்று (13.6.2025) டெரன்ஸ், ஷியாஷ்டன், இருதய அந்தோணி சிரியல் ஆகியோருக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு பரணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் பாராட்டினார்.

1 More update

Next Story