திண்டுக்கல்: அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை


திண்டுக்கல்: அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
x

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டு 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த சமாதானபிரபு (வயது 38) என்பவரை அவரது தம்பி சாம்சன் (35), அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த வழக்கில் அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் சாம்சனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் அறிவுறுத்தலின்படி, அம்பாத்துரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், நீதிமன்ற ஏட்டு திருமுருகன் மற்றும் அரசு வழக்கறிஞர் குமரேசன் ஆகியோரின் முயற்சியால் நேற்று (22.04.2025) திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளி சாம்சனுக்கு 10 ஆண்டு 4 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

1 More update

Next Story