சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு: அமைச்சர் துரைமுருகன் கிண்டல்


சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு: அமைச்சர் துரைமுருகன் கிண்டல்
x

காவிரி- கோதாவரி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்,

வேலூர் காட்பாடியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: காவிரி- கோதாவரி திட்டம் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால்தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறாரே?.

பதில்: காவிரி- கோதாவரி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகுதான் இந்த நிலை என்பதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஏதாவது தெரியுமா?. ஊர் ஊராக போய் ஏதாவது பேசிக்கொண்டிருக்க கூடாது.

கடை விரித்து வைத்துக்கொண்டு

கேள்வி: முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா தி.மு.க.வுக்கு வந்ததை தொடர்ந்து, மேலும் அ.தி.மு.க.வினர் தி.மு.க.வுக்கு வர வாய்ப்புள்ளதா?.

பதில்: எனக்கு தெரியாது.

கேள்வி: சீமான் மற்றும் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளாரே?.

பதில்: கடை விரித்த உடனே 4 பேர் வரத்தான் செய்வார்கள். கடையை விரித்து வைத்துக்கொண்டு யாரும் வரவில்லை என்றால் என்ன செய்வது?. 'வாங்க, வாங்க சார்' என்று அழைக்கத்தான் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story