சென்னையில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


சென்னையில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.

சென்னை

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 4.12.2025 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர்/ இ&ப/அடையாறு, தரைதளம், வேளச்சேரி துணைமின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை-42 என்ற விலாசத்தில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை தெற்கு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story