ஜனவரி 26ல் கிராமசபை கூட்டம்: 100 நாள் வேலை திட்டம் பழைய நிலையில் தொடர வேண்டி தீர்மானம்- செல்வப்பெருந்தகை


ஜனவரி 26ல் கிராமசபை கூட்டம்: 100 நாள் வேலை திட்டம் பழைய நிலையில் தொடர வேண்டி தீர்மானம்- செல்வப்பெருந்தகை
x

ஜனவரி 26-ல் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வருகின்ற 26.1.2026 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராமசபை கூட்டத்தில், கிராமப்புற ஏழை எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தில், 100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதையும், மத்திய அரசின் நிதி பங்களிப்பை குறைத்ததையும் கண்டித்து அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். அதோடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் மீண்டும் பழைய நிலையிலேயே தொடர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து, நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மேற்சொன்ன தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story