நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x

நெல்லையில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, படப்பக்குறிச்சி, காமராஜர் தெருவில் வசித்து வரும் சங்கரலிங்கம் மகன் பாலசுப்பிரமணியன் மற்றும் இரண்டு நபர்களை திருநெல்வேலி, கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சின்னகுட்டி (வயது 26), பெருமாள் மகன் அழகுமுத்து(22), மற்றும் ஆறுமுகம் மகன் சங்கர்கணேஷ்(27) ஆகியோர் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, தெற்கு பைப்பாஸ் ரோடு, ரோஸ்மேரி மிஷன் மருத்துவமனை அருகே ஏப்ரல் 4-ம் தேதி பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியுள்ளனர்.

மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த சின்னகுட்டி, அழகுமுத்து, சங்கர்கணேஷ் ஆகிய 3 பேரும், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை ஆணையர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி நேற்று (22.04.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story