நெல்லை: பணப்பிரச்சினை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது


நெல்லை: பணப்பிரச்சினை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
x

நெல்லை மாநகரில் பேட்டையைச் சேர்ந்த ஒருவர், பணப்பிரச்சினை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம், பேட்டை, கோடீஸ்வரன்நகரை சேர்ந்த பெருமாள்பாண்டியன் மகன் வானமாமலை (வயது 43) என்பவர் நெல்லை மாநகர பகுதியில் பணப்பிரச்சினை காரணமாக பொதுமக்களை அச்சுறுத்தி கடத்திச் சென்ற வழக்கில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், டவுண் சரக போலீஸ் உதவி கமிஷனர் அஜுக்குமார், பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நேற்று முன்தினம் வானமாமலை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story