தமிழகம் முழுவதும் பல்வேறு ரெயில்களில் புதிய நிறுத்தங்கள் அறிவிப்பு

இந்த நடவடிக்கை மூலமாக, முக்கிய ரெயில் நிலையங்களில் ஏற்படும் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் விரைவு ரெயில்களுக்கு பயணிகளின் தேவை அடிப்படையில் கூடுதல் நிறுத்தங்களை வழங்க பயணிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் 47 ரெயில்களுக்கு பல்வேறு முக்கிய ரெயில் நிலையங்களில் கூடுதல் தற்காலிக நிறுத்தங்களை வழங்க ரெயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலமாக, முக்கிய ரெயில் நிலையங்களில் ஏற்படும் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நிறுத்தங்கள் பெரும்பாலும் வரும் ஜனவரி 26, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்(12633): ஜனவரி 26 முதல் கோவில்பட்டி நிலையத்தில் அதிகாலை 02.03 மணிக்கு நின்று செல்லும். தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12694): ஜனவரி 26, 2026 முதல் தூதிமேலூர் நிலையத்தில் இரவு 9.10 மணிக்கு நின்று செல்லும். செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (20684): ஜனவரி 26, 2026 முதல் சிவகங்கை மற்றும் பேராவூரணி நிலையங்களில் நிறுத்தப்படும்.
இதனை தவிர, இன்னும் சில ரெயில்களுக்கும் புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.










