இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
Live Updates
- 21 Aug 2025 12:02 PM IST
தவெக மாநாடு திடல் முழுவதும் தண்ணீர் தெளிக்க முடிவு
தவெக மாநாடு பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், ராட்சத டிரோன் மூலமாக மாநாடு திடல் முழுவதும் தண்ணீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 21 Aug 2025 11:32 AM IST
வாட்டி வதைக்கும் வெயில் - தொடர்ந்து குவியும் தவெக தொண்டர்கள்
மாநாட்டு திடலின் உள்ளே ஏராளமான தொண்டர்கள் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருப்பதால், அந்த பகுதி மக்கள் வெள்ளத்தால் திணறி வருகிறது.
கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால் உள்ளே நிறுத்தப்பட்டுள்ள லாரிகளுக்கு அடியிலும், ஒலிபெருக்கி, தண்ணீர் தொட்டி, மின்விளக்குகளுக்கு அடியிலும் தொண்டர்கள் ஒதுங்கி வருகின்றனர். மேலும் பெட்ஷூட்களை பேரிகார்டுகளில் கட்டி அதன் நிழலில் பெண்கள் அமர்ந்துள்ளனர்.
- 21 Aug 2025 11:05 AM IST
தவெக மாநாட்டில் சுமார் 45 நிமிடங்கள் பேசுகிறார் விஜய்
மதுரை பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டில் சுமார் 45 நிமிடங்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின் விஜய்யின் பேச்சு தொடங்கும் என்றும் இன்றைய மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 21 Aug 2025 10:57 AM IST
மாநாட்டு திடலுக்கு முன்கூட்டியே வருகிறார் விஜய்
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளதாகவும், இரவு 7 மணிக்குள் மாநாட்டை முடித்து தொண்டர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சரியாக மூன்று மணிக்கு மாநாடு திடலுக்கு விஜய் வருவார் என தகவல் வெளியாகி உள்ளது. 3 மணிக்கு வருகை தரும் விஜய், அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 21 Aug 2025 10:34 AM IST
தவெக மாநாடு - ராம்ப் வாக் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி தீவிரம்
தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் விஜய் ராம்ப் வாக் செல்லும் பகுதி தடுப்புகளில் கிரீஸ் தடவப்படுகின்றன. விஜய் ராம்ப் வாக் செல்லும் போது தடுப்புகளில் ஏறி ரசிகர்கள் அத்துமீறுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 21 Aug 2025 10:32 AM IST
விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்; எனக்கு பின்னால்... - சீமான்
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்; எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள்; அவர்களது அனைவரது நலனுக்காகத்தான் நான் போராடுகிறேன்” என்று கூறினார்.
- 21 Aug 2025 10:27 AM IST
தவெக மாநாடு: 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம்
மதுரை தவெக மாநாட்டுத் திடலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மாநாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் உடனடியாக குளுக்கோஸ் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாநாட்டு திடலில் 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 3500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறப்பு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 21 Aug 2025 10:21 AM IST
"சீமான் ஒழிக" - மதுரை மாநாட்டில் தவெகவினர் கோஷம்
சீமானை கண்டிக்கும் வகையில் தவெக மாநாட்டில் "சீமான் ஒழிக" என தொண்டர்கள் கோஷமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
‘தளபதி’ என தவெகவினர் கத்துவது ‘தலைவிதி’ என கேட்பதாக, அண்மையில் தவெகவை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 21 Aug 2025 10:07 AM IST
தவெக மாநாடு: கண்ணீர் விட்ட கர்ப்பிணிபெண்
தவெக மாநாட்டில் கர்ப்பிணிகள், குழந்தைகள் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், தனது மகனுடன் புதுக்கோட்டையை சேர்ந்த கர்ப்பிணி பெண் மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்கு புறப்பட்டதாக தெரிகிறது.
மாநாட்டிற்கு வர வேண்டாம் என நிர்வாகிகள் வலியுறுத்தியும் எப்படியாவது விஜயை பார்த்தாக வேண்டும், தனக்கு ஒன்றும் நிகழாது என அந்த பெண் கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 21 Aug 2025 9:59 AM IST
நிழலை தேடும் தவெக தொண்டர்கள்
தவெக மாநாடு நடைபெறும் பாரபத்தியில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக தவெக தொண்டர்கள் நாற்காலிகளுடன் நிழலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.




















