திருநெல்வேலி: கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


திருநெல்வேலி: கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

சுத்தமல்லி மற்றும் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், நரசிங்கநல்லூரை சேர்ந்த கருப்பன் மகன் வேல்முருகன் (வயது 47) என்பவர், சுத்தமல்லி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி, மகிழ்ச்சிநகரை சேர்ந்த ரமேஷ்பாண்டியன் மகன் பிரபாகரன்(35) என்பவர், சிவந்திபட்டி காவல் நிலைய சரகம், கிருஷ்ணாபுரம் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி, சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், வேல்முருகன், பிரபாகரன் ஆகிய 2 பேரும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story