திருநெல்வேலி: பாலியல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் இரு வேறு இடங்களில் பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி: பாலியல் வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, வடுவூர்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கனகராஜ்(எ) கடற்கரையாண்டி (வயது 66) என்பவர் பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், நேற்று கனகராஜ்(எ) கடற்கரையாண்டி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பட்டன்காடு, நடுத் தெருவை சேர்ந்த தங்கசாமி மகன் ராதாகிருஷ்ணன் (வயது 44) என்பவர் பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் நேற்று ராதாகிருஷ்ணன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com