இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Jan 2026 10:52 AM IST
ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை
ஈரான் அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள். உங்களுக்கு உதவி வந்து கொண்டிருக்கிறது என டிரம்ப் கூறினார்.
- 14 Jan 2026 10:51 AM IST
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு
திபெத்தில் ரிக்டர் 3.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14 Jan 2026 10:50 AM IST
தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகை உணர்வை அனுபவிப்பதற்காக, சிறிது நேரம் ஒதுக்குங்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
- 14 Jan 2026 10:49 AM IST
கோஸ்டாரிகா ஜனாதிபதியை கொல்ல சதி திட்டம்; பெண் கைது
கோஸ்டாரிகா நாட்டின் அரசியலமைப்பின்படி 2-வது முறையாக ரோட்ரிகோ தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால், தன்னுடைய முன்னாள் மந்திரிகளில் ஒருவரான லாரா பெர்னாண்டஸ் வெற்றி பெறுவதற்கான ஆதரவை வழங்கியுள்ளார்.
- 14 Jan 2026 10:32 AM IST
கிரீன்லாந்தை இணைக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
கிரீன்லாந்தை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைப்பது தொடர்பான மசோதாவை குடியரசு கட்சி எம்.பி.யான ராண்டி பைன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
- 14 Jan 2026 10:30 AM IST
ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள்: டிடிவி தினகரன் வாழ்த்து
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஒ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 Jan 2026 10:27 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
- 14 Jan 2026 10:26 AM IST
போகிப் பண்டிகை - நயினார் நாகேந்திரன் வாழ்த்து
இந்த போகி பொங்கல் 2026 உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், சிறந்த ஆரோக்கியத்தையும், ஆன்மீகத்தையும் கொண்டு வரட்டும் அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துகள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- 14 Jan 2026 10:24 AM IST
இந்த போகிப் பண்டிகையோடு திமுக அரசு அகற்றப்பட வேண்டும் - அண்ணாமலை
திமுக ஆட்சியை அரசியல் தீயில் கரைத்து, புதிய எதிர்காலத்தை உருவாக்கும் போகிப் பண்டிகையாக நிச்சயம் மாறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 14 Jan 2026 10:23 AM IST
போகிப்பண்டிகை: சென்னையில் 8 விமானங்கள் ரத்து - 7 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு
பனி மூட்டத்துடன் புகையும் சேர்வதால் விமான நிலைய ஓடுபாதையே தெரியாத அளவுக்கு மாறிவிடுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு மும்பை செல்லும் விமானம், காலை 8 மணிக்கு டெல்லி செல்லும் விமானம். அதிகாலை 3.05 மணிக்கு புனே செல்லும் விமானம், காலை 6.35 மணிக்கு கோவை செல்லும் விமானம் என 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



















