நெல்லையில் ஆன்லைன் பண மோசடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


நெல்லையில் ஆன்லைன் பண மோசடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த "கணினிவெளிச் சட்டக்குற்றவாளி" ஒருவர் நெல்லையில் இணையவழி முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களை நம்பச் செய்து மோசடி செய்துள்ளார்.

திருநெல்வேலி

"கணினிவெளிச் சட்டக்குற்றவாளியான" கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த நாசர் மகன் இஜாஸ் அகமது (வயது 28) என்பவர் திருநெல்வேலி மாநகரில், இணையவழி முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களை நம்பச் செய்து போலியான வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த ஆசையை தூண்டி, ஆன்லைன் மோசடி செய்துள்ளார். இவர் அவ்வாறு பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதன் மூலம் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தலைமையிடம்) விஜயகுமார், மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி இன்று இஜாஸ் அகமது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story