போரை நிறுத்த ரஷியா மறுப்பு: புதினை சந்தித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை - டிரம்ப்

புதினை சந்தித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

ரஷியா -உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து ஹங்கேரியில் நடக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தபோவதாகவும் அப்போது இந்த போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனிடையே உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் உடன்பாடில்லை என ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜியோ லவ்ரவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ரஷியா அதிபர் புதினுடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் அது வீணான காரியம் என தெரிவித்தார். அவர், நான் தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்து அவரை (புதின்) சந்திக்க விரும்பவில்லை. வீணான சந்திப்பில் எனக்கு விருப்பம் இல்லை. என்னதான் நடக்கிறது என பார்க்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com