பெருந்தலைவர் காமராஜரின் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடும் அரசு திராவிட மாடல் அரசு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பெருந்தலைவர் காமராஜரின் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடும் அரசு திராவிட மாடல் அரசு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

பெருந்தலைவர் காமராஜரின் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடும் அரசு திராவிட மாடல் அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி, ராமநாதபுரம் வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

தி.மு.க. மீது எந்த விமர்சனமும் வைக்கமுடியாதவர்கள் அவதூறு பேசுகின்றனர். பிரதமர் மோடி அவர்களே நாங்கள் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளோம், ஊர் சுற்ற அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் குடும்ப கட்சிதான், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நன்மை செய்யும் கட்சி தி.மு.க.

தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டதை எதிர்த்து உருவானதுதான் தி.மு.க. தமிழ்நாட்டை எப்படியாவது அடிமைபடுத்திவிடமுடியாதா? என்று பகல்கனவு காணும் பா.ஜ.க.வின் தூக்கத்தை கெடுக்கும் கொள்கை வாரிசுகள் நாங்கள்.

இப்படிப்பட்ட கொள்கை உரமிக்க தன்மான கூட்டத்தை பார்த்தால் உங்களுக்கு (பிரதமர் மோடி) கசக்கத்தான் செய்யும்.

பெயர் மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஆனால் அதில் 60 விழுக்காடு பணம் மாநில அரசு தரவேண்டும். இப்படி ஸ்டிக்கர் ஒட்டி பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது. இதனால் தான் சொல்கிறோம் பிரதமர் மோடி வாயால் வடை சுடுவார்.

தமிழ்நாட்டிற்கு தந்த எந்த வாக்குறுதியாவது பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளாரா? தமிழ்நாட்டிற்கு மோடி செய்தது என்ன? தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யாமல், தமிழ்நாட்டிற்கு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர் கொண்டுவரும் திட்டங்களுக்கு நான் தடையாக இருக்கிறேன் என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி எந்த திட்டத்தை கொண்டுவந்தார்? தமிழ்நாட்டிற்கு எந்த சிறப்பு திட்டத்தை கொண்டுவந்தீர்கள் என்று நானும் நாள்தோறும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடியால் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த சிறப்புதிட்டம் என்று எதையும் கூறமுடியவில்லை.

திராவிட மாடல் அரசு என்பது தமிழ்நாட்டு மக்கள் அரசு. பெருந்தலைவர் காமராஜரின் சிந்தனைகளை உள்வாங்கி நடைபோடும் அரசு திராவிட மாடல் அரசு. அதன் அடையாளமாகத்தான் பெருந்தலைவர் காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியதுபோல காலையில் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம்/

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story