இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் அக்னிபாத் திட்டம் ரத்து - ராகுல்காந்தி


இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் அக்னிபாத் திட்டம் ரத்து - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 27 May 2024 4:19 PM IST (Updated: 27 May 2024 4:46 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் பெண்கள் வங்கி கணக்கில் மாதம் தலா ரூ. 8,500 செலுத்தப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பாட்னா,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ம் கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது.

உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (9 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), இமாச்சலபிரதேசம் (4 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகரில் 1 தொகுதி என மொத்தம் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீகார் மாநிலம் பக்தியர்பூரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பெண்கள் வங்கி கணக்கில் தலா ரூ. 8,500 செலுத்தப்படும். இந்த திட்டம் ஒவ்வொரு குடும்பங்களின் நிதி நிலையில் மாற்றத்தை கொண்டுவரும். பிரதமர் மோடி தன்னை கடவுள் அனுப்பி வைத்தார் என்று கூறுகிறார். ஆனால், ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை கேள்வி எழுப்பினால், எனக்கு எதுவும் தெரியாது, என்னை கடவுள் அனுப்பினார் என்று பிரதமர் மோடி கூறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story