'தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி; அதற்கு துணை போனவர் எடப்பாடி பழனிசாமி' - செல்வப்பெருந்தகை தாக்கு


தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி; அதற்கு துணை போனவர் எடப்பாடி பழனிசாமி - செல்வப்பெருந்தகை தாக்கு
x

பிரதமர் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் எதை வைத்து தமிழக மக்களிடம் வாக்கு கேட்க முடியும் என செல்வப்பெருந்தகை விமர்சித்தார்.

திருச்சி,

திருச்சியில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பார்த்து உலக நாடுகள் எல்லாம் பயந்தன. அவர் 'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்பட்டவர். ஆனால் இன்று சீனாவிடம் சுமார் 20 ஆயிரம் சதுர கி.மீ. இடத்தை தாரை வார்த்துவிட்டு பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். அவர் உள்ளூர் மக்களுக்கும் விசுவாசமாக இல்லை. வெளியுறவுத்துறையிலும் நியாயமாக நடக்கவில்லை.

இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தேர்தல். தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் பிரதமர் மோடி. அதற்கு துணை போனவர் எடப்பாடி பழனிசாமி. இவர்கள் இருவரும் எதிரணியில் இருக்கிறார்கள். எதை வைத்து இவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்க முடியும்? மக்களின் வரிப்பணத்தை எடுப்பவர் நரேந்திர மோடி. மக்களுக்காக கொடுப்பவர் ராகுல் காந்தி." இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.



Next Story