ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரே ஸ்டாலின் - அண்ணாமலை விமர்சனம்
மக்களை தரிசிப்பதற்காகவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள் என்று அண்ணாமலை கூறினார்.
கோவை,
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜக தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல; மக்கள் தரிசன யாத்திரை. மக்களை தரிசிப்பதற்காகவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?; யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கே தெரியும். பணத்தைக் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது.
களத்தில் இருப்பவர்களின் பெயர்களையே பிரதமர் மோடி குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ போய் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார்.
தமிழகத்தில் பிரிவினை சக்திகள் ஒடுக்கப்படுவார்கள் என்பது பிரதமர் மோடியின் உத்தரவாதம். பாஜக மீது கடந்த 50 ஆண்டுகளாக போலியான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2024 தேர்தலுக்கு பின் பாஜக மீது உருவாக்கப்பட்ட பிம்பம் சுக்குநூறாக உடைந்துபோகும்.
ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை மு.க.ஸ்டாலின் என்று வைத்தால் அதில் வேந்தராக மோடி இருப்பார்; பல்கலை.யில் நடக்கும் பிரச்சினைகளை வேந்தர்கள்தான் வெளிக்கொண்டு வருவார்கள். ஜூன் 4-ம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.