கனமழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 64 ஏரிகள் முழுமையாக நிரம்பின


கனமழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 64 ஏரிகள் முழுமையாக நிரம்பின
x

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் 64 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 31 ஏரிகள் முழுகொள்ளளவையும், 33 ஏரிகள் நிரம்பும் தருவாயிலும் உள்ளன. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 29 ஏரிகள் முழுகொள்ளவை எட்டியுள்ளன.

சென்னையில் உள்ள 16 ஏரிகளில் 4 ஏரிகள் முழுகொள்ளளவையும், 12 ஏரிகள் 99 சதவீதமும் நிரம்பியுள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.


Next Story