தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி
தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
ஆவணங்களில் கையெழுத்திடப்படுவதற்கு சாட்சியாக இருந்து, அவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய அதிகாரம் படைத்தவர்கள் நோட்டரிகள் ஆவார்கள். இதற்கிடையே, மக்கள்தொகை அதிகரிப்பு, மாவட்டங்கள், தாலுகாக்கள் அதிகரிப்பு, நோட்டரி சேவையின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், நோட்டரிகள் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் எழுந்தன.
அதை கருத்தில் கொண்டு, நோட்டரிகள் விதிமுறைகளில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான், நாகாலாந்து ஆகிய மாநில அரசுகள் அதிகபட்ச நோட்டரிகள் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு, நோட்டரிகள் எண்ணிக்கையை 2 ஆயிரத்து 500-ல் இருந்து 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துக் கொள்ளலாம். குஜராத் மாநில அரசு, 2 ஆயிரத்து 900-ல் இருந்து 6 ஆயிரமாக அதிகரித்துக் கொள்ளலாம்.