செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
2025-12-13 06:49:15
பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு தொலைபேசி எண்: தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்கான பாதாள சாக்கடை குழாய் அடைப்பு குறித்த புகார்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்-18002030401 என்பதில் தொடர்பு கொள்ளலாம்.
13 Dec 2025 8:37 AM IST
கேரள உள்ளாட்சி தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது.
13 Dec 2025 8:29 AM IST
வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் உயிரிழப்பு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Dec 2025 8:21 AM IST
கண்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்: அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு
கண்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர்.
13 Dec 2025 8:03 AM IST
கன்னியாகுமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்: கலெக்டர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 16 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 35 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் ஆவர்.
13 Dec 2025 7:46 AM IST
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: 31-ந்தேதிக்குள் அமல்படுத்தப்படும் - டாஸ்மாக் உத்தரவாதம்
வருகிற 31-ந்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.
13 Dec 2025 7:37 AM IST
சாலை விரிவாக்க பணி: திருச்சியில் நாளை மறுநாள் மின்தடை
திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் ராஜாராம் சாலையில் விரிவாக்க பணி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
13 Dec 2025 7:29 AM IST
வரி ஏய்ப்பு செய்து ரூ.100 கோடிக்கு சொத்துகள் வாங்கிய தி.மு.க. பிரமுகர் - விசாரணையில் அம்பலம்
சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
13 Dec 2025 7:27 AM IST
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டால், எளிதில் வர்த்தகம் செய்வது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
13 Dec 2025 7:26 AM IST
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
13 Dec 2025 7:11 AM IST
நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்
விளாத்திகுளத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிந்து வருமாறு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
13 Dec 2025 6:51 AM IST









