பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்


பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2025 4:09 PM IST (Updated: 5 Dec 2025 5:17 PM IST)
t-max-icont-min-icon

மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் டிசம்பர் 22ம் தேதி 11 மணிக்கு மதுரையிலும், 24 வாகனங்கள் டிசம்பர் 23ம் தேதி 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை

தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் காவல்துறை பறிமுதல் செய்த பல்வேறு வாகனங்களை ஏலம் விடுவது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர், குற்றம் அவர்களின் உத்தரவின்படி காவல் துறை தலைவர், குற்றம் அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 30- இரண்டு சக்கர வாகனம், 2- மூன்று சக்கர வாகனம், 30- நான்கு சக்கர வாகனம், 4 லாரிகள் மற்றும் 6 படகுகள் என மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் 22.12.2025 அன்று 11 மணிக்கு மதுரையிலும் மற்றும் 24 வாகனங்கள் 23.12.2025 அன்று 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 7.12.2025 முதல் 21.12.2025 வரை திருச்சி (9498158708), கன்னியாகுமரி (9444580750), தேனி (9788924045), திண்டுக்கல். (7904065255), சிவகங்கை (8300063466), மதுரை (9585511010), நாகப்பட்டினம் (7904548453), கோயம்பத்தூர் (9498173282), சேலம் (7200008025) மற்றும் விழுப்புரம் (9894378470) ஆகிய போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டு கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நுழைவு கட்டணமாக ரூ.1,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்திவிட்டு இரண்டு நாட்களுக்குள் அதற்குண்டான GST தொகையை அவர்களுடைய GST கணக்கில் செலுத்திவிட்டு அதன் நகலை சம்மந்தப்பட்ட NIB அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அதன் பின்னர் வாகனத்தின் விற்பனை ஆணை வழங்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் அவர்களின் ஆதார் அட்டை நகலை ஏலத்திற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story