தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
x

பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே கூடுதலாக சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:-

சென்னை சென்ட்ரல் - போத்தனூர் (வண்டி எண்: 06049/06050):-

  • சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.
  • மறுமார்க்கத்தில் போத்தனூரில் இருந்து அக்டோபர் 18-ம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், இரவு 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
  • மேலும், போத்தனூரில் இருந்து (வண்டி எண்: 06100 ) அக்டோபர் 21-ம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

தாம்பரம் - கன்னியாகுமரி (வண்டி எண்: 06133):-

  • தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் 1.25 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும்.

கன்னியாகுமரி-செங்கல்பட்டு (வண்டி எண்: 06134):-

  • கன்னியாகுமரியில் இருந்து அக்டோபர் 17-ம் தேதி மதியம் 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு வந்துசேரும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 2.15 முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story