சென்னை: பெண் தொழிலாளியை பலாத்காரம் செய்த லாரி கிளீனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை


சென்னை: பெண் தொழிலாளியை பலாத்காரம் செய்த லாரி கிளீனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சென்னையில் கூலி வேலைக்கு செல்ல காத்திருந்த 40 வயது பெண்ணை வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று தனியார் விடுதிக்கு அழைத்து சென்ற லாரி கிளீனர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

சென்னை

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சாஜிவ் (வயது 32), லாரி கிளீனர். இவர், சென்னை விருகம்பாக்கம் மார்க்கெட் பகுதியில் கூலி வேலைக்கு செல்ல காத்திருந்த 40 வயது பெண்ணை வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று தனியார் விடுதிக்கு அழைத்து சென்று, பிரியாணி வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கத்திமுனையில் நகை பறித்தது தொடர்பாக அந்த மாவட்ட போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அது பற்றி, கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோயம்பேடு போலீசார் அவரை கைது செய்தனர். 20 நாட்களுக்கு முன்பு புழல் சிறைக்கும் மாற்றப்பட்டார்.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராஜேஷ் ராஜூ, ‘தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சாஜிவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

1 More update

Next Story