மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பா.ஜ.க.வின் அரசியலா..? - தி.மு.க. எம்.பி. கனிமொழி


மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பா.ஜ.க.வின் அரசியலா..? - தி.மு.க. எம்.பி. கனிமொழி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 Feb 2025 3:13 PM IST (Updated: 16 Feb 2025 3:16 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. அரசின் தற்போதைய ஆயுதம்தான் புதிய கல்விக் கொள்கை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய மந்திரியே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பா.ஜ.க.வின் அரசியலா..?

அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.

இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story