எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்தது வெட்கக்கேடு: அமைச்சர் ரகுபதி


எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்தது வெட்கக்கேடு: அமைச்சர் ரகுபதி
x

திமுகவுடன் மோதும் அளவுக்கு எதிரிகளுக்கு வலிமை இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நிருபா்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனமான கூட்டணியாகும். எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க.வின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. திராவிட மாடல் ஆட்சி தொடர மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ்நாட்டு மக்களின் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியுமே தவிர கூட்டத்தைக் கூட்டி யாராலும் வெல்ல முடியாது. தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையை இன்றைக்கு ஒவ்வொரு சர்வே மூலமாக நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடர வேண்டும்.

11 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 தேர்தல் நிச்சயமாக தரும். எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி. தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு. நாங்கள் எப்போதும் எதிரிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இறுமாப்பு கொண்டவர்கள் கிடையாது. எதிரிகள் இருக்கிறார்கள்,

ஆனால் எங்களோடு மோதும் அளவிற்கு அவர்கள் வலிமையாக இல்லை. தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாங்கள் சொன்னதை செய்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை தருகிறோம் என்று கூறினோம். எங்கள் வெற்றிக்கான கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story