கார் விற்பனை நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்தவர் கைது


கார் விற்பனை நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்தவர் கைது
x

நெல்லை மாநகரம், பாளையங்கோட்டையில் உள்ள கார் விற்பனை நிலையத்திற்குள் சென்ற ஒருவர், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரில் உள்ள ஒரு கார் விற்பனை நிலையத்தில் நபர் ஒருவர் உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் தகராறு செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோ ஒன்று சமூகவலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளிவந்தது.

இந்த சம்பவம் கடந்த 18.11.2025 அன்று மாலையில் திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் சரகத்திலுள்ள ஒரு கார் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிலையில், 19.11.2025 அன்று இரவு கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராபின்சன் (ராபின் கார்ஸ்) என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

1 More update

Next Story