பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது


பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது
x

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர், பெண் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ்அப்புக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார்.

நீலகிரி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். போலீசாருக்கு பயணப்படிக்கான ரசீது ஒதுக்கி, பணம் கொடுத்தல் உள்ளிட்ட எழுத்து பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பிற மாவட்டத்துக்கு சென்று வந்த செலவு விவரங்களுக்கான தொகையை தருமாறு நீலகிரியில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், முருகனிடம் விண்ணப்பத்துடன் ரசீதுகளை கொடுத்து உள்ளார். அதில் அந்த இன்ஸ்பெக்டரின் செல்போன் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த செல்போன் எண்ணை குறித்துக்கொண்ட முருகன், பெண் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ்அப்புக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இன்ஸ்பெக்டர், இதுகுறித்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முருகனை கைது செய்தனர்.

1 More update

Next Story