அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை.. தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்


அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை.. தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்
x

கோப்புப்படம்

முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் சமரசம் கிடையாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தனது அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என்று கூறி, தனித்து போட்டியிட உள்ளார். மேலும் இந்த மாதம் தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 8 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மதுரை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதன்படி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் முழுவீச்சில் தயாராகி வரும்நிலையில், மதுரையில் நடக்கும் 2-வது மாநில மாநாட்டின் மீது அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில் விஜய் ஒரு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளரிடம் கலந்துரையாடியுள்ளார். அதன் விவரம் வெளியாகி உள்ளது.

அந்த கலந்துரையாடலில் விஜய் கூறியதாவது:-

எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தை கண்டும் நான் கலங்குவதில்லை. மாற்றத்தை நோக்கியே என் பயணம் இருக்கிறது. அ.தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். த.வெ.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் நாங்கள் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story