நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
Published on

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அந்த நிகழ்ச்சியில், "இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநலச் சமுதாயமும், சமயச் சாரப்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல், அரசியல் நீதி எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு, இவற்றில் தன்னுரிமை, சமுதாய படிநிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும், உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையராய் நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம். என்று உறுதிமொழி ஏற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com