இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Sept 2025 10:08 AM IST
மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: தென் கொரியாவுக்கு எதிராக சீனா வெற்றி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
சூப்பர்4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனா-தென் கொரியா அணிகள் மல்லுக்கட்டின. ஏற்கனவே இறுதிப்போட்டியை உறுதி செய்து விட்ட சீனாவை குறைந்தபட்சம் 2 கோல் வித்தியாசத்தில் வீழ்த்தினால் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் தென் கொரியா களம் இறங்கியது.
இத்தகைய பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சீன அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அதிர்ஷ்டம் கிட்டியது.
- 14 Sept 2025 10:06 AM IST
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணியுங்கள் - சமூக வலைதளத்தில் வலுக்கும் எதிர்ப்பு
இந்த ஆட்டத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு அந்த நாட்டுடனான இந்தியாவின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டியில் மோதக்கூடாது என்று ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- 14 Sept 2025 10:04 AM IST
கமல்ஹாசன் வுக்காக கமல்ஹாசன் பாடிய பாடல் - இணையத்தில் வைரல்
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடந்தது. அப்போது, இளையராஜாவுக்காக மேடையிலேயே கமல்ஹாசன் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 14 Sept 2025 10:03 AM IST
3-வது டி20: தொடரை வெல்லப்போவது யார்..? தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், 2-வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாட்டிங்காமில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- 14 Sept 2025 10:01 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுடன் இந்திய அணி இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- 14 Sept 2025 9:54 AM IST
திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்
தவெக தலைவர் விஜய் திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் திமுக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
- 14 Sept 2025 9:34 AM IST
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலட் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடந்தது. அப்போது, இளையராஜா குறித்து ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 14 Sept 2025 9:27 AM IST
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, "தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக, இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக்கும். புதிய, பழைய எதிர்க்கட்சியினருக்கும். ஒரு சவாலாக, வாருங்கள் 2026 தேர்தலில் பார்க்கலாம் என்று தனக்கே உரிய புன்னகையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனது நண்பர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
- 14 Sept 2025 9:22 AM IST
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
விழாவுக்கு தலைமை தாங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார்.விழாவில் அவர் பேசியதாவது:-
இந்த இடத்தில் தமிழர்கள், தமிழ்நாடு சார்பில் நான் இளையராஜாவிடம் கோரிக்கை விடுக்கிறேன். ராஜா கைய வச்சா அது ராங்கா போகாது.இசை துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும்.இளையராஜாவுக்கு எந்த மகுடமும் சாதாரணமானது தான். ஆனாலும் இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்க வேண்டும் என்பதை ஆவலாக விருப்பமாக கோரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
- 14 Sept 2025 9:16 AM IST
என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா; ரஜினிகாந்த் புகழாரம்
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது.
என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு. எவ்வளவோ இழப்புகளை சந்தித்தபோதும் ராஜாவிடம் சலனம் இல்லை. ராகங்களை அள்ளிக்கொடுப்பவர் ராஜா. நான் அவரை சாமி என்றே அழைப்பேன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் ராஜா. ராஜாவுடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
















