இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Dec 2025 9:42 AM IST
பல தலைமுறைகளைக் கவர்ந்த நடிப்பாற்றல்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 12 Dec 2025 9:41 AM IST
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- 12 Dec 2025 9:39 AM IST
ஆந்திரா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டைழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.
- 12 Dec 2025 9:37 AM IST
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் காலமானார்
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் (வயது 91) இன்று காலமானார். மராட்டியத்தின் லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் அவர் காலமானார்.
- 12 Dec 2025 9:35 AM IST
சூரிய பகவானுக்கு ஜோதி ஸ்வரூபமாக காட்சி கொடுத்த அண்ணாமலையார்
மகா தீபக்காட்சி நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதனையடுத்து மலை உச்சியில் இருந்து மகா தீபக்கொப்பரை இறக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்படும் மை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
- 12 Dec 2025 9:30 AM IST
சென்னை: போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு
தகவலின் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ரவுடி விக்கி போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோட முயன்றார். இதில் சப் இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்காப்பிற்காக ரவுடி விக்கியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டரும், ரவுடியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 12 Dec 2025 9:27 AM IST
புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 12 Dec 2025 8:53 AM IST
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க த.வெ.க.வுக்கு, பா.ம.க. நேரில் அழைப்பு
பா.ம.க. சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வருகிற 17-ந்தேதி போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க. தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் பா.ம.க. சார்பில் அழைப்பு விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் த.வெ.க. கட்சி தலைமை அலுவலகத்துக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் அழைப்பு கடிதத்தை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு கொண்டு வந்து கொடுத்தார்.
- 12 Dec 2025 8:51 AM IST
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027-ம் ஆண்டு முதல் செயல்படும் - இஸ்ரோ தலைவர் பேட்டி
2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
- 12 Dec 2025 8:50 AM IST
ரஜினியின் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்! முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்து விட்டனர். இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.



















