தவெக - காங்கிரஸ் கூட்டணியா? - செங்கோட்டையன் பதில்


தவெக - காங்கிரஸ் கூட்டணியா? - செங்கோட்டையன் பதில்
x

விஜய் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சர் என ஏற்றுக்கொள்கிற கூட்டணிதான் தவெகவில் இணையும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அலுவலகத்தில் செங்கோட்டையன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். மேலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? எனற கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது;-

அனைவரும் மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பணியாற்றி வருகிறோம். திமுக வெற்றி பெறுவதற்காக பழைய ஓய்வுதிய திட்டத்தை நிறைவேற்றி தருவோம் என வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது. இன்று வரை நிறைவேற்றி தரவில்லை என்பதால் தான் போராட்டம் நடந்து வருகிறது.

தவெக உடன் கூட்டணிக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் தலைவர் தான் அதனை முடிவு செய்வார். எங்களை பொருத்தவரை விஜய் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சர் என ஏற்றுக்கொள்கிற கூட்டணிதான் தவெகவில் இணையும். அவர்களை வாழ்த்தி வரவேற்போம். தவெக -காங்கிரஸ் கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் கருத்துகளை சொல்லலாம். ஆனால் பேச்சு வார்த்தை என்பது தலைவர் இருக்கிறபோது அவருடன் கலந்து பேசுவதுதான் பேச்சு வார்த்தையாக இருக்கும்.

அதிமுக - திமுக இரு கட்சிகளையும் தாக்குவது தவெக தான். வெற்றி என்ற முடிவை தவெக அடையபோகிறது என்பதால் தான் இரு கட்சிகளும் தவெகவை தாக்குகிறது. எதிர்க்கட்சி ஆளும் கட்சியை தாக்குவதில்லை. ஆளும் கட்சியின் குறைபாடுகளை எதிர்க்கட்சி சொல்வதில்லை. எல்லாரும் தவெகவை தான் தாக்குகிறார்கள். மக்கள் ஏற்றிக்கொள்கிற தலைவர் விஜய் தான் என்ற முறையில் நம்மை தான் விமர்சனம் செய்கிறார்கள். மற்றவர்களை அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story