இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க.அரசுதான் - எடப்பாடி பழனிசாமி தாக்கு


இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க.அரசுதான் - எடப்பாடி பழனிசாமி தாக்கு
x
தினத்தந்தி 3 April 2024 2:46 PM GMT (Updated: 3 April 2024 2:49 PM GMT)

அ.தி.மு.க. இல்லையென்றால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வந்திருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கரூர்,

கரூர் தோரணம்பட்டியில் கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

அ.தி.மு.க. கொடுத்த தொடர் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க.அரசு வழங்குகிறது.வீட்டில் சுவர் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமைத்தொகையை நிறுத்துவோம் என தி.மு.க.,வினர் மிரட்டி வருகின்றனர். தி.மு.க.,வினர் மிரட்டினால் பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது நான் பொறுப்பு. உரிமைத்தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அ.தி.மு.க., தான். ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் தன் குடும்பத்தினர் பதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

கரூரில் செந்தில் பாலாஜி பினாமிகள் 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்றனர். ஆயுட்காலம் வரையில் சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி. இந்தியாவில் ஊழல் செய்வதிலும் போதை பொருள் விற்பனையிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது. வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விட்டதாக தி.மு.க. பச்சை பொய் கூறுகிறது. தி.மு.க. வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. 95% நிறைவேற்றியதாக பேசுகின்றனர். இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. அரசுதான்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story